உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எல்.என்.ஜி.,யில் ஓடும் லாரிகள் ஊக்குவிக்கும் டாடா மோட்டார்ஸ்

எல்.என்.ஜி.,யில் ஓடும் லாரிகள் ஊக்குவிக்கும் டாடா மோட்டார்ஸ்

மும்பை:சரக்கு போக்குவரத்தில் எல்.என்.ஜி., லாரிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எல்.என்.ஜி., கேஸ் வினியோகம் செய்யும் திங்க் கேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் பசுமை போக்குவரத்து இலக்கை ஆதரிக்கும் வகையில், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எல்.என்.ஜி., எரிபொருள் எளிதாக கிடைக்கும் படி, நிலையங்களை அமைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க இது உதவியாக இருக்கும். நாட்டின் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து மையங்கள் உள்ள வழித்தடங்களை கண்டறிந்து எல்.என்.ஜி., கட்டமைப்புகளை விரிவுபடுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேசமயம், சிறந்த எரிவாயு திறன், குறைந்த மாசு, நல்ல செயல்திறன் வழங்கும் எல்.என்.ஜி., லாரிகளை உருவாக்கியும் வருகிறது. திங்க் கேஸ் நிலையங்களில், டாடா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுதும், எல்.என்.ஜி., எரிபொருள் நிரப்பும் கட்டமைப்புகளை உருவாக்குவது ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி