உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / குறுஞ்செய்தி

குறுஞ்செய்தி

கோரிக்கை

மும்பை, சாண்டாக்ரூஸ் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் உள்ள நகை ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். டிரம்ப் அறிவித்த புதிய வரி காரணமாக தங்கள் ஏற்றுமதி பாதிக்கும் என்பதால், அவர்கள் இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

உயர்வு

வர்த்தக காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களுக்கு, ஒரே அளவாக 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதால், 'ட்ரோன் ஆச்சார்யா, ஐடியாபோர்ஜ், பராஸ் டிபென்ஸ்' உள்ளிட்ட ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை, நேற்று ஐந்து சதவீதம் வரை உயர்ந்தது.

மையம்

ஜப்பானைச் சேர்ந்த 'கோபெல்கோ கன்ஸ்ட்ரக் ஷன்' நிறுவனத்தின் இந்திய பிரிவான, கோபெல்கோ கன்ஸ்ட்ரக் ஷன் எக்யுப்மென்ட் இந்தியா' நிறுவனம், ஹைட்ராலிக் எக்ஸ்கவேட்டர்கள் எனும் அகழ் இயந்திரங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் உள்ள அதன் ஆலையில், புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை