உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / குறுஞ்செய்திகள்

குறுஞ்செய்திகள்

தரவு மையங்கள்

இந்திய தரவு மையத்துறை தற்போது 86,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருப்பதாக, 'அனராக் கேப்பிடல்' தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் பங்களிப்பு, கூட்டு முயற்சிகள் மற்றும் கையகப் படுத்தல்கள் வாயிலாக 55,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

வீடுகள் விற்பனை

நடப்பாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் முக்கிய நகரங்களின் வீடு விற்பனை 23 சதவீத சரிவை சந்தித்துள்ளது. மேலும், புதிய வீடுகள் வினியோகத்திலும், கடந்த 2021 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகள் சாதனைக்கு பின், நடப்பாண்டின் முதல் காலாண்டில் 34 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

அலுவலக குத்தகை

கடந்த 2024ம் ஆண்டில், பி.எப்.எஸ்.ஐ., எனப்படும் வங்கி, நிதிச்சேவை மற்றும் காப்பீட்டுத்துறை 1.34 கோடி சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்திருந்தததாக, முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு மேலாண்மை நிறுவனமான ஜே.எல்.எல்., தெரிவித்து உள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும், 19.50 சதவீதம் கூடுதலாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை