மேலும் செய்திகள்
ஒருவழியாக ஏற்றம் கண்டது
30-Jul-2025
நிப்டி: 24,722.75 மாற்றம்: 157.40 ஏற்றம் பச்சை சென்செக்ஸ்: 81,018.72மாற்றம்: 418.81 ஏற்றம் பச்சை https://x.com/dinamalarweb/status/1952529236658651591 உயர்வுக்கு காரணங்கள்
* சர்வதேச சந்தைகள் ஏற்றத்தால், உலோகம், கமாடிட்டி, வாகன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன * வாகன விற்பனை தரவுகள், நிறுவனங்கள் காலாண்டு முடிவுகள் சாதகமாக அமைந்தது வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. உலோகம், வாகனத் துறை பங்குகள் அதிக கொள்முதல், டாலர் மதிப்பு பலவீனமானது, காலாண்டு முடிவுகள் திருப்திகரம் ஆகியவற்றால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. நிறுவன காலாண்டு முடிவுகள், வாகன நிறுவனங்களின் விற்பனை தரவுகள் அளித்த நம்பிக்கையால், சென்செக்ஸ் வர்த்தக இடையில், 498 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதனால், நாள் முழுதும் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
உலக சந்தைகள்
வெள்ளியன்று அமெரிக்கச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வு கண்டன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி சரிவு கண்டாலும், ஹாங்காங்கின் ஹேங்சேங், தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வு கண்டன. உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%) ஹீரோமோட்டோகார்ப் 5.18 டாடா ஸ்டீல் 4.08 அதானிபோர்ட்ஸ் 3.56 சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%) பவர்கிரிட் 1.12 எச்.டி.எப்.சி., பேங்க் 0.88 ஓ.என்.ஜி.சி., 0.70
30-Jul-2025