உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் பருப்பு இறக்குமதி பாதியாக குறைந்தது

நாட்டின் பருப்பு இறக்குமதி பாதியாக குறைந்தது

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில், நாட்டின் பருப்பு இறக்குமதி 8,908 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 18,282 கோடி ரூபாயாக இருந்தது. 100 சதவீதத்துக்கு கீழ் இறக்குமதி குறைந்தது போல் தெரிந்தாலும், இதை ரூபாய் மதிப்பில் ஒப்பிட்டு பார்த்தால் 51 சதவீதம் சரிந்துள்ளது. சர்வதேச அளவில் பருப்பு வகைகளின் விலை குறைவு மற்றும் நம் நாட்டின் இறக்குமதி தேவை குறைவு ஆகிய இரண்டுமே இதற்கு காரணம். கடந்த நிதியாண்டில் 48,136 கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம் 73 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை