உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இதுவரை பி.எல்.ஐ., திட்டத்தில் வழங்கப்பட்ட நிதி ரூ.21,500 கோடி

இதுவரை பி.எல்.ஐ., திட்டத்தில் வழங்கப்பட்ட நிதி ரூ.21,500 கோடி

புதுடில்லி:பி.எல்.ஐ., எனும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 12 துறைகளுக்கு 21,534 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த 2021ம் ஆண்டு 1.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 14 துறைகளை உள்ளடக்கி, பி.எல்.ஐ., திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, இந்த துறைகளில் முதலீடுகளை திரட்டுவது மற்றும் உதவித்தொகை வழங்குவது குறித்து திட்டமிட, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முக்கிய தகவல்கள்:

மொத்த உதவித்தொகை ரூ.21,534கோடிமொத்த முதலீடு: ரூ.1.76 லட்சம் கோடிமொத்த உற்பத்தி: ரூ.16.50லட்சம் கோடி

மருந்து பொருட்கள் துறை

மொத்த விற்பனை: ரூ.2.66 லட்சம் கோடிஏற்றுமதி: ரூ.1.70 லட்சம் கோடிஉள்நாட்டு மதிப்பு கூட்டல்: 83.70 %

ஜவுளி

செயற்கை இழை ஏற்றுமதி2023 - 24: ரூ.48,4502024 - 25: ரூ.51,000மின்னணு பொருட்கள் ஐ.டி., வன்பொருள்  மொத்த மருந்துகள் மருத்துவ சாதனங்கள் மருந்து பொருட்கள் தொலைத்தொடர்பு உணவு பதப்படுத்துதல் வாகனம்  ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் ஜவுளி ட்ரோன்கள்  வீட்டு உபயோக சாதனங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை