அறிவோம் இயந்திரம் (Tag) மின்சார கோளாறுகளை குறைக்கும் ‘ஹார்மானிக் பில்டர்’
தொழிற்சாலைகளில் மின்சார கோளாறுகளை குறைக்க பயன்படும் 'ஹார்மானிக் பில்டர்' சாதனம், மத்திய சிறு, குறு தொழில் துறையின் 'எம்.எஸ்.இ., கிப்ட்' தொழில்நுட்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளது. என்ன சாதனம்?
மின்சாரத்தில் ஏற்படும் 'ஹார்மானிக் டிஸ்டார்ஷன்' பிரச்னையை குறைத்து, மின் சாதனங்கள் சீராக இயங்க உதவும் சாதனம். எப்படி செயல்படுகிறது?
வி.எப்.டி., வெல்டிங் மெஷின் உள்ளிட்ட கருவிகளால் மின்சாரத்தில் ஏற்படும் தேவையற்ற மாற்றங்களை ஹார்மானிக் பில்டர் குறைக்கிறது. என்ன பயன்?
மோட்டார், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் அதிக வெப்பமடைவதையும், மின்சார இழப்பையும் குறைக்க உதவும். யாருக்கு பயன்படும்?
ஜவுளி, இன்ஜினியரிங், வெல்டிங் தொழிற்சாலைகள் மற்றும் வி.எப்.டி., பயன்படுத்தும் சிறு தொழில்கள். கவனிக்க வேண்டியது: மின்சாரத்தின் தரத்தை பரிசோதித்து, பிரச்னைக்கு ஏற்ற ஹார்மானிக் பில்டரை தேர்வு செய்ய வேண்டும்.மேலும் விபரங்களுக்கு: dcmsme.gov.inதிட்டம்: எம்.எஸ்.இ கிப்ட்- தொழில்நுட்ப பட்டியல் எண் 346.