உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ‘பின்னலாடை தொழிலுக்கு ‘டீப் டெக்’ தேவை’

‘பின்னலாடை தொழிலுக்கு ‘டீப் டெக்’ தேவை’

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மட்டுமின்றி, ஆழ்நிலை தொழில்நுட்பத்திலும் (டீப் டெக்) முதலீடு செய்வது அவசியம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட தமிழக தொழில் நகரங்களுக்கு, உலகளாவிய போட்டியை சமாளிக்க உற்பத்தி செலவை குறைத்தல், தரத்தை பராமரித்தல், சரியான நேரத்தில் வினியோகம், கழிவுகளை குறைத்தல் ஆகியவை அவசியம். இதற்கு புதிய இயந்திரங்களை வாங்குவது மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள இயந்திரங்கள், மென்பொருட்கள், தொழிலாளர்கள், உற்பத்தி தகவல்களை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், உலக சந்தையில் வெற்றியை பெறுவது அதிக இயந்திரங்களை கொண்ட நிறுவனங்கள் மட்டுமல்ல. மனிதவளம், தொழில்நுட்பம், தகவல், ஆற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை சிறப்பாக ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள்தான். டீப்டெக் தொழில்நுட்பமே எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை