மேலும் செய்திகள்
புதிய பங்கு வெளியீடுகள்
21-Jun-2025
10,000நாட்டின் இரண்டாவது பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல்', ஐ.பி.ஓ., வாயிலாக 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த புருடென்ஷியல் நிறுவனம், நிறுவனத்தில் தனக்கு உள்ள 1.76 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அதாவது, புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்படாது. திரட்டப்படும் தொகையும் புருடென்ஷியல் நிறுவனத்துக்கே சென்று சேரும்.3.23கடந்த மாதம் தங்க இ.டி.எப்., திட்டங்களில், கிட்டத்தட்ட 3.23 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020க்குப் பின், ஐந்து ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச முதலீடு என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. முந்தைய மே மாதத்தில் தங்க இ.டி.எப்., திட்டங்களில் இருந்து 15,300 கோடி ரூபாய் முதலீடு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3,395ஆந்தெம் பயோ சயின்சஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,395 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. பங்கு விலை 540 - 570 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை. பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் வரும் 14 முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
21-Jun-2025