உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு மீட்சிக்கான வாய்ப்பு குறைவு

தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு மீட்சிக்கான வாய்ப்பு குறைவு

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்றைய வர்த்தக நேர முடிவில் 12 பைசா குறைந்து, இதுவரை இல்லாத வகையில் 85.27 ரூபாயாக சரிந்துள்ளது. தற்போது, கச்சா எண்ணெய் விலையும் உயர துவங்கி இருப்பது, ரூபாயின் மதிப்பில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.இந்திய பங்குச் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக முதலீட்டை திரும்ப பெற்று வருவது, மாதக்கடைசியில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்திருப்பது ஆகியவை, தற்போதைய சரிவுக்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது. கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதல் டாலரின் மதிப்பு தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்திய நிறுவனங்களின் மந்தமான இரண்டாவது காலாண்டு முடிவுகள் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகள் குறைந்ததால், இந்திய பங்குச்சந்தையும் ரூபாய் மதிப்பு சரிவில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த உதவ முடியாத நிலையில் உள்ளது. இதனிடையே, தற்போது கச்சா எண்ணெய் விலையும் உயர துவங்கி உள்ளதால், ரூபாய் மதிப்பு மீட்சியடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை