இது நாட்டின் வளர்ச்சிக்கான காலம்
டூ - வீலர், டிராக்டர் தயாரிப்பில் இந்தியா முதலிடம்; செல்போன் தயாரிப்பில் இரண்டாம் இடம் என, இது நம்நாட்டின் வளர்ச்சிக்கான காலம். உலக அளவில் அவசரநிலையும் நிச்சயமற்ற தன்மையும் நிலவுவதற்கு மத்தியில், இந்தியா மீது உலகம் நம்பிக்கை வைத்துஇருக்கிறது. 140 கோடி மக்களின் நம்பிக்கையால், நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் ஐந்து செமி கண்டக்டர் ஆலைகள், உலக நாடுகளுக்கு 'சிப்'களை வினியோகிக்கும் நாள் விரைவில் வரும்.