மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 40% அதிகரிப்பு
சென்னை: கடந்த செப்டம்பரில் மூன்று சக்கர வாகன விற்பனை, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025 செப்டம்பரில், 61 ஆயிரத்து 434 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் 86 ஆயிரத்து 24 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், மின்சார வாகனங்களின் பங்கு, 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறைந்த பயன்பாடு மற்றும் பராமரிப்பு செலவு, அதிக செயல்திறன் மற்றும் ரேஞ்ச், சார்ஜிங் கட்டமைப்பு அதிகரிப்பு, மின்சார வாகனங்களுக்கு சி.என்.ஜி., வாடிக்கையாளர்கள் மாறி வருவது உள்ளிட்டவை மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனைக்கு முக்கிய காரணங்கள். இந்த மாதத்தின் மொத்த மின்சார வாகன விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு, மூன்று சக்கர வாகனங்கள் ஆகும். பஜாஜ் நிறுவனம், கடந்த மாதம் 15 ஆயிரத்து 109 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து, முதல் இடத்தில் உள்ளது. இதை, மஹிந்திரா, டி.வி.எஸ்., ஒய்.சி., எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் பின் தொடர்கின்றன.