ரூ.50 லட்சம் நிதி ஸ்டார்ட்அப்க்கு அவகாசம்
சென்னை:விண்வெளி துறையை சேர்ந்த, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள், 50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க, அவகாசத்தை தேதி குறிப்பிடாமல் தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகத்தில் செயற்கைக்கோள், ராக்கெட் உருவாக்கம், உதிரி பாகங்கள் உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கிய விண்வெளி 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை ஊக்குவிக்க, 10 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதியின் கீழ், விண்வெளி துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா, 50 லட்சம் ரூபாய் வரை மானியம் அல்லது பங்கு மூலதனம் வழங்க, ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு, அந்நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசத்தை நீட்டிக்குமாறு தொழில்முனைவோர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடைசி தேதி குறிப்பிடாமல் கால அவகாசத்தை, ஸ்டார்ட்அப் டி.என்., நீட்டித்துள்ளது.