உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டி.என்.பி.எல்., நிறுவனத்துக்கு கோல்டன் பீக்காக் விருது

டி.என்.பி.எல்., நிறுவனத்துக்கு கோல்டன் பீக்காக் விருது

சென்னை:தமிழக அரசின் டி.என்.பி.எல்., எனப்படும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுது காகிதம், காகித அட்டை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஐ.ஓ.டி., அதாவது, 'இன்ஸ்டியூட் ஆப் டைரக்டர்ஸ்' அமைப்பு, உலகளவில் சிறந்த வணிக நடைமுறை, பொறுப்பான தலைமைத்துவத்தை ஊக்குவித்து வருகிறது. பிரிட்டனில், இம்மாதம் 13ம் தேதி நடந்த அதன் உலகளாவிய மாநாட்டில், நிறுவன ஆளுமை மற்றும் பசுமை முயற்சிகளை உள்ளடக்கிய நிலைப்புத்திறன் செயலை அங்கீகரிப்பதற்கான, 'கோல்டன் பீக்காக்' விருதை, டி.என்.பி.எல்., நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.இந்த விருதை, டி.என்.பி.எல்., நிறுவன தலைவர் சந்தீப் சக்சேனா சார்பில், முதன்மை பொது மேலாளர்கள் நாகராஜன், கலைச்செல்வன் ஆகியோர் பெற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி