மேலும் செய்திகள்
இண்டஸ்இண்ட் வங்கிக்கு புதிய நிர்வாகிகள் குழு
01-May-2025
ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை தயாரிக்கும் 'பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ்' புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 2,150 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது இந்நிறுவனம். பங்கு வெளியீடு வருகிற 21ம் தேதி துவங்கி 23ம் தேதி முடிய உள்ளது. ஒரு பங்கின் விலை 85 முதல் 90 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் 1,618 கோடி ரூபாய் நிதியை, நிறுவனத்தின் கடனை செலுத்த பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 டிசம்பர் நிலவரப்படி, நிறுவனத்திற்கு 2,600 கோடி ரூபாய் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. வங்கி கணக்குகளில் முறைகேடு
இண்டஸ்இண்ட் ஆய்வில் உறுதி
வங்கியின் உள் தணிக்கைக்கு பின், 1,269 கோடி ரூபாய் அளவில் கணக்கு முறைகேடுகள் நடத்துள்ளதை, இண்டஸ்இண்ட் வங்கி, செபிக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. ஹிந்துஜா குழுமத்திற்கு சொந்தமான இண்டஸ்இண்ட் வங்கி, உள் தணிக்கைத் துறை அறிக்கையின்படி, கடந்த 2025ம் நிதியாண்டின் மூன்று காலாண்டுகளுக்கு 674 கோடி ரூபாயை, வட்டியாக தவறாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பிற சொத்து கணக்குகளில் 595 கோடி ரூபாய் ஆதாரமற்ற இருப்புகள் இருப்பதும் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து, மொத்தம் 1,269 கோடி ரூபாய்க்கு கணக்கு முறைகேடுகள் நடந்துள்ளதை வங்கி உறுதிப்படுத்தியதை அடுத்து, வங்கியின் பங்குகள் விலை 2.78 சதவீதம் சரிந்தது.மசகான் டாக் ஷிப் நிறுவனம்
சந்தை மதிப்பில் முன்னேற்றம்
அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனமான 'மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' பங்கு விலை, மும்பை பங்கு சந்தையில் 10 சதவீதம் உயர்ந்து, 3,492 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த ஏற்றம் சந்தை மதிப்பில் அந்தந்த துறைகளை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனங்களை விஞ்ச வழிவகுத்தது. இதையடுத்து, தற்போது மசகான் டாக் ஷிப் பில்டர்சின் சந்தை மதிப்பு 1.40 லட்சம் கோடியாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பாரத் பெட்ரோலியம், பவர் பைனான்ஸ், டி.வி.எஸ்., மோட்டார்ஸ், கோத்ரெஜ் நுகர்வோர் தயாரிப்புகள், பிரிட்டானியா, டாடா பவர், அதானி குழுமத்தின் அம்புஜா சிமென்ட்ஸ், ரியல் எஸ்டேட் நிறுவனமான மேக்ரோடெக் டெவலப்பர்ஸ், நிதி நிறுவனமான சோழ மண்டலம் ஆகியவற்றை சந்தை மதிப்பில் முந்தியுள்ளது. துபாயில் கல்வி மையம்
ஐ.ஐ.எப்.டி., துவக்குகிறது
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனமான ஐ.ஐ.எப்.டி., துபாயில் அதன் முதல் வெளிநாட்டு கல்வி மையத்தை அமைப்பதாக தெரிவித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி அமைப்பாக இயங்கி வரும் ஐ.ஐ.எப்.டி., நிறுவனத்தின் முடிவுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தனது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.எப்.டி., என்பது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக துறைக்கான திறன்களை வளர்ப்பதற்காக 1963ம் ஆண்டு நிறுவப்பட்டது.
01-May-2025