வர்த்தக துளிகள்
சீன டி.ஏ.பி., உரம் இறக்குமதி கு றைந்தது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டி.ஏ.பி., எனும், டை அமோனியம் பாஸ்பேட் உரம் தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 22.28 லட்சம் டன் டி.ஏ.பி., உரம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் இது 8.47 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கடந்த ஜூலையில் 97,000 டன் இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. சீன ஏற்றுமதி கட்டுப்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பணம் சார்ந்த விளையாட்டு கூகுள் சம்மதம்
பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை கூகுள் பிளே தளத்தில் பட்டியலிட, கூகுள் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. சம வாய்ப்பு வழங்க மறுப்பதாக கூகுள் மீது வின்சோ கேம்ஸ் நிறுவனம், இந்திய சந்தை போட்டி ஆணையத்தில் கடந்தாண்டு வழக்கு தொடுத்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கூகுள் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளது. ரெய்டுக்கு ஒத்துழைக்க ஜேன் ஸ்ட்ரீட் மறுப்பு வருமான வரித்துறை சோதனைக்கு ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் அதன் இந்திய வர்த்தக் கூட்டாளியான நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனங்களின் மும்பை அலுவலகங்களில், நேற்று முன்தினம் முதல் ஐ.டி., சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வர் அணுகலை வழங்க மறுப்பதாக ஜேன் ஸ்ட்ரீட் மீது ஐ.டி., அதிகாரிகள் குற்றம்சாட்டிஉள்ளனர்.