உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ரூ.11,227 கோடி ஏர்டெல் பங்குகள் விற்பனை

பா ர்தி ஏர்டெல் நிறுவனத்தின் 11,227 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, சுனில் பார்தி மிட்டலுக்கு சொந்தமான ஐ.சி.ஐ.எல்., எனும் 'இந்தியன் கான்டினென்ட் இன்வெஸ்ட்மென்ட்' நிறுவனம் சந்தையில் நேரடியாக விற்றுள்ளது. இரண்டு தினங்களில், 6 கோடி பங்குகளை, பங்கு ஒன்றின் விலை 1,870 - 1,872 ரூபாய்க்கு இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனையடுத்து, ஐ.சி.ஐ.எல்., வசமுள்ள பார்தி ஏர்டெல் பங்குகள், 2.47 சதவீதத்தில் இருந்து 1.49 சதவீதமாக குறைந்து உள்ளது.

பல்வகை தளவாட பூங்கா: உ.பி., தீவிரம்

கி ரேட்டர் நொய்டாவில் 174 ஏக்கர் பரப்பளவில், பல்வகைத் தளவாட பூங்கா அமைப்பதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதில் உத்தரபிரதேச அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள தளவாட பூங்கா வாயிலாக 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். இந்த பூங்காவை அமைப்பதற்கான ஏலத்தில், அதானி போர்ட்ஸ், சூப்பர் ஹேண்ட்லர்ஸ் மற்றும் எம்பேசர் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ