வர்த்தக துளிகள்
பொருளாதார வளர்ச்சி 6.50% எஸ் அண்டு பி., கணிப்பு
ந டப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை எஸ் அண்டு பி., மாற்றமின்றி அறிவித்துள்ளது. வலுவான உள்நாட்டு தேவை, அதிகரிக்கும் முதலீடு மற்றும் அரசின் வரி சீர்திருத்தங்கள் ஆகியவை இதற்கு வழிவகுக்கும் என அது தெரிவித்து உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நாடாக இந்தியா தொடரும் என்றும்; நுகர்வும், மூலதன செலவினமும் முக்கிய உந்துசக்தியாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, உணவுப் பொருட்களின் விலை குறைவால், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 3.20 சதவீதமாக குறை யும் என்றும் எஸ் அண்டு பி., கணித்துள்ளது. எஸ் பேங்க்கில் மேலும் 4% பங்குகள்
எஸ்.எம்.பி.சி., வங்கி வாங்கியது
ஜ ப்பானைச் சேர்ந்த எஸ்.எம்.பி.சி., வங்கி, எஸ் பேங்க்கில் மேலும் 4.22 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, எஸ் பேங்க்கில் எஸ்.எம்.பி.சி.,யின் பங்கு 20 சதவீதத்திலிருந்து 24.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, எஸ் பேங்க் பங்குச் சந் தையில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், எஸ்.எம்.பி.சி., நேற்று முன்தினம் 132.39 கோடி பங்குகளை வாங்கியதாக தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த எஸ் பேங்க்கின் மிகப்பெரிய பங்குதாரராக எஸ்.எம்.பி.சி., உருவெடுத்துள்ள நிலையில், எஸ்.பி.ஐ., தொடர்ந்து 10 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை தன் வசம் வைத்துள்ளது.
'ஜோஹோ'வுக்கு மாறிய அஸ்வினி வைஷ்ணவ் @
@ம த்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மென்பொருள் சேவைகளுக்கு இனி இந்திய மென்பொருள் தளமான ஜோஹோவை மட்டுமே பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டாக்குமென்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட்ஸ், மற்றும் பிரசன்டேஷன்கள் தயாரிக்க, இனி இந்தியாவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் தளமான ஜோஹோவுக்கு மாறுகிறேன்,” என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் 'சுதேசி' பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று, இதை அமைச்சர் செய்துள்ளார்.