உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

மோர்பி ரிச்சர்ட்ஸ் உரிமத்தை கையகப்படுத்தியது பஜாஜ்

பி ரிட்டனை சேர்ந்த மின்சார சாதனங்கள் பிராண்டான மோர்பி ரிச்சர்ட்ஸின் பிராண்டு உரிமம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையை, கிளன் டிம்பிளக்ஸ் குழுமத்திடம் இருந்து 146 கோடி ரூபாய்க்கு பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் கையகப்படுத்தி உள்ளது. நம் நாடு மட்டுமின்றி, நேபாளம், பூடான், பங்களாதேஷ், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் இதனை பயன்படுத்தும் உரிமத்தை பெற்றுள்ளதாக பங்குச்சந்தையில் அது தெரிவித்தது. இதனையடுத்து, நேற்று வர்த்தகத்தின் போது, 6 சதவீதம் உயர்வு கண்ட பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் பங்குகள், பின்னர் 3 சதவீத உயர்வுடன் முடிவடைந்தன.

விமான தயாரிப்பு : எல் அண்டு டி., பெல் கைகோர்ப்பு

இ ந்திய விமானப்படையின் ஐந்தாவது தலைமுறை போர் விமானத்துக்கான தொழில்நுட்பங்களை அளிப்பதற்காக, உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்டு டி., பொதுத்துறையைச் சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் உடன் கைகோர்த்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனங்கள் தேஜஸ் விமான திட்டத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவை ஆகும்.

ஹரியானாவில் கனரக வாகன ஆலை துவங்கியது மோன்ட்ரா எலக்ட்ரிக்

மு ருகப்பா குழுமத்தை சேர்ந்த மோன்ட்ரா எலக்ட்ரிக், ஹரியானாவின் மானேசரில் மின்சார கனரக வர்த்தக வாகன ஆலையை துவங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய பேட்டரி தயாரிப்பு ஆலை முழுதும் பெண்கள் மட்டும் பணிபுரிய உள்ளனர். ஆண்டுக்கு 6,000 மின்சார கனரக வர்த்தக வாகனங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 7,500 வாகனங்கள் வரை தயாரிப்பை விரிவுப்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !