| ADDED : டிச 07, 2025 01:51 AM
ரஷ்யாவில் பதஞ்சலி ஆ யுர்வேத மருத்துவ பொருட்கள் விற்பனையில்
ஈடுபட்டு வரும் பதஞ்சலி குழுமம், ரஷ்யாவில் வணிகம் செய்ய அந்நாட்டு அரசுடன்
ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்,
மருத்துவ சுற்றுலா, திறன் வாய்ந்த மருத்துவ பணியாளர்கள் பரிமாற்றம்,
ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என
பதஞ்சலி தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் ரஷ்ய
வர்த்தக அமைச்சர் செர்ஜே செரமின் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐ.பி.ஓ., வர செப்டோ ஆயத்தம் க் விக் காமர்ஸ் சேவைகளை வழங்கி வரும் செப்டோ, பொது நிறுவனமாக மாறுவதற்கு அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். நாடு முழுதும், 900 டார்க் ஸ்டோர்களுடன் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் மதிப்பு 62,300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல், முதலீட்டாளர்களிடம் இருந்து 16,000 கோடி ரூபாயை திரட்டி உள்ளது. செப்டோ, ஐ.பி.ஓ.,வுக்கு அனுமதி கேட்டு இம்மாதம் செபியிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும், அடுத்தாண்டு ஜூனில் சந்தையில் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பயோகான் - பயோலாஜிக்ஸ் இணைப்பு ப யோகான் பயோலாஜிக்ஸ் நிறுவனத்தை முழு தும், தன் நிறுவனத்துடன் இணைக்க இருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான பயோகான் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சீரம் இன்ஸ்டிடியூட், மைலன் உள்ளிட்ட நிறுவனங்களின் வசமுள்ள 49,000 கோடி ரூபாய் மதிப்பிலான பயோகான் பயோலாஜிக்ஸ் பங்குகளை வாங்க இருப்பதாக, பங்குச்சந்தையில் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு 100 பயோகான் பயோலாஜிக்ஸ் பங்குகளுக்கும், 70.28 பயோகான் பங்குகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.