உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பழங்குடியின தொழில்முனைவோர் கண்காட்சி

பழங்குடியின தொழில்முனைவோர் கண்காட்சி

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான, 'டி.என்.பீட் எக்ஸ்போ- 2025' கண்காட்சி மற்றும் கருத்தரங்கு துவக்க விழா, சென்னையில் நடைபெற்றது.நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். இரண்டு நாள் கண்காட்சியில், பழங்குடியின மக்கள் தயாரித்த மன அமைதியை ஏற்படுத்தும் இசைக் கருவிகளில் துவங்கி, சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்கள் வரை கிட்டத்தட்ட 15,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் 500 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. விழாவில் பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:முதல் முறையாக கடந்தாண்டு துவங்கிய இந்த கண்காட்சியில் 350க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 8,000க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பார்வையிட்ட, பலரும் தற்போது தொழில் துவங்கி உள்ளனர். இந்த முறை கண்காட்சி வாயிலாக, வணிக நிறுவனங்களுடன் நேரடி கொள்முதல் வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை