உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வரி விதிப்பு கெடுவை நீட்டித்த டிரம்ப்: ஏற்றுமதியாளர்கள் நிம்மதி

வரி விதிப்பு கெடுவை நீட்டித்த டிரம்ப்: ஏற்றுமதியாளர்கள் நிம்மதி

புதுடில்லி: டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு, இந்திய ஏற்றுமதியாளர்களின் நிம்மதியையும் நீட்டித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு, கூடுதல் கால அவகாசமும் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ஜூலை 9ம் தேதி வரை இந்த வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதற்கு முன்னதாக, அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தவறினால், ஜூலை 9ம் தேதிக்கு பின், வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என கூறினார்.https://x.com/dinamalarweb/status/1942868898564735284இந்நிலையில், கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சீனா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளுடன் மட்டும் தான் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக., 1 வரை கெடுவை டிரம்ப் நீட்டித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவு அந்நாட்டுடன் பேச்சு நடத்த கூடுதல் கால அவகாசம்வழங்கியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.https://x.com/dinamalarweb/status/1942810691255296107இதற்கிடையே, முதற்கட்டமாக வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டன. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை