உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துாத்துக்குடி வின்பாஸ்ட் ஆலை ஜூன் மாதத்தில் உற்பத்தி துவக்கம்

துாத்துக்குடி வின்பாஸ்ட் ஆலை ஜூன் மாதத்தில் உற்பத்தி துவக்கம்

சென்னை:வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான வின்பாஸ்ட், அதன் தமிழக உற்பத்தி ஆலையை, ஜூன் மாதத்தில் திறக்கவுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி பாம் ஹட் விவாங் தெரிவித்துள்ளார். இந்த ஆலை, தற்போது துாத்துக்குடியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:வியட்நாம் வாகன சந்தையை தவிர, இந்தியா, இந்தோனேசிஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் சந்தைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். இந்திய உற்பத்தி ஆலை, ஜூன் மாத இறுதிக்குள் திறக்கப்படும்.போதிய வரவேற்பு இல்லாததால், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில், விற்பனையை அதிகரிக்க இயலவில்லை. அதனால், அமெரிக்காவில் கட்டமைக்கப்படும் உற்பத்தி ஆலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிறுவனத்தின் தமிழக ஆலையில், ஆண்டுக்கு 50,000 கார்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில், 1.50 லட்சம் கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் இந்த ஆலைக்கு உண்டு. முதல் ஐந்து ஆண்டுகளில், 4,266 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

உண்மை கசக்கும்
ஏப் 25, 2025 22:42

அந்த கம்பெனி தலைவரே சொல்கிறார் அமெரிக்காவில் கட்டமைக்கப்படும் உற்பத்தி ஆலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் என்ன தெரிகிறது.. டப்பா கார் இது.. தூத்துக்குடிக்கு ஏற்கெனவே நல்ல பெயர்.. இங்கு ஆரம்பித்த ஸ்டெர்லைட் இழுத்து மூடப்பட்டது. அடுத்தது இது. வெளங்கிடும்


m.arunachalam
ஏப் 25, 2025 18:04

வரவேற்போம் . வியட்நாம் நம்மை விட முன்னிலையில் உள்ளது ஏன் ?. நாம் இடத்தை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்துகிறோம் . தெளிதல் நலம் .


VENKATASUBRAMANIAN
ஏப் 25, 2025 08:44

இதையும் அரச செய்து மூடி விடுவார்கள். இதுதான் திராவிட மாடல்


S.Martin Manoj
ஏப் 25, 2025 13:43

இந்த ஆலையை கொண்டு வந்ததே திராவிட மாடல்தான்


Vasan
ஏப் 25, 2025 05:53

Best wishes for VINFAST Long live the company


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை