வேலையின்மை விகிதம் 4.90 சதவிகிதம் ஆக குறைந்தது
புதுடில்லி:கடந்தாண்டு வேலைவாய்ப்பு சற்று அதிகரித்ததால், நாட்டின் வேலையின்மை விகிதம் 4.90 சதவீதமாக குறைந்து உள்ளதாக, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு, வேலையின்மை விகிதம் 5 சதவீதமாக பதிவாகி இருந்தது.மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:கிராமப்புறங்களில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் 4.30 சதவீதத்தில் இருந்து 4.20 சதவீதமாக சிறிய அளவில் குறைந்து இருந்தது. நகர்ப்புறங்களில் ஆண்கள் வேலையின்மை விகிதம் 6.0 சதவீதத்தில் இருந்து 6.10 சதவீதமாக அதிகரித்து உள்ளது.அதே நேரம் பெண்கள் வேலையின்மை விகிதம் 8.90 சதவீத்தில் இருந்து 8.20 சதவீதமாக குறைந்து, நகர்ப்புற ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 6.70 சதவீதமாக நிலையாக உள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.