வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்தியாவில் சீன வாகனங்கள் நுழைய தொடங்கி இருக்கிறது.
முதலில் இதை இந்தியாவில் செய்ய வேண்டும்.
புதுடில்லி: தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சீன மென்பொருள் மற்றும் வன்பொருளை பயன்படுத்தும் வாகனங்களை, அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.இணைய மற்றும் வழிகாட்டி செயலிகளுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வாயிலாக, அமெரிக்க வாகன ஓட்டிகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை சீன நிறுவனங்கள் திரட்டி வருவதாக, அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கண்டறிய கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், சீன மென்பொருள் பயன்படுத்தும் வாகனங்களை, வரும் 2027ம் ஆண்டு முதலும்; வன்பொருள் பயன்படுத்தும் வாகனங்களை, வரும் 2029 அல்லது 2030 முதல் தடை செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிரியாக கருதப்படும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து, இனி அங்கு எவ்வித சீன வாகனத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனில், தற்போது அங்கு இயங்கி வரும் பெரும்பான்மையான சீன கார்கள் மற்றும் லாரிகளில் இணைய சேவைகள் மற்றும் வழிகாட்டி செயலிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சீன வாகனங்கள் நுழைய தொடங்கி இருக்கிறது.
முதலில் இதை இந்தியாவில் செய்ய வேண்டும்.