உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க ஏற்றுமதி ரூ.6.55 லட்சம் கோடியானது பேங்க் ஆப் பரோடா அறிக்கையில் தகவல்

அமெரிக்க ஏற்றுமதி ரூ.6.55 லட்சம் கோடியானது பேங்க் ஆப் பரோடா அறிக்கையில் தகவல்

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கிட்டத்தட்ட 6.55 லட்சம் கோடி ரூபாயை எட்டியதாக, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி, 10 சதவீத ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 1991 - 92ம் நிதியாண்டில், மொத்த ஏற்றுமதியில் 16.40 சதவீதமாக இருந்த அமெரிக்க ஏற்றுமதியின் பங்கு, தற்போது 18 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டில், அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகளில் 40 சதவீதம் மருந்து பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைதொடர்பு கருவிகள், ஆயத்த ஆடைகள் ஆகும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி