உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வின்பாஸ்ட் துாத்துக்குடி ஆலை தாமதம் ஆகிறது தயாரிப்பு

வின்பாஸ்ட் துாத்துக்குடி ஆலை தாமதம் ஆகிறது தயாரிப்பு

சென்னை :துாத்துக்குடி ஆலையில் மின்சார கார்கள் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வின்பாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் மின்சார கார்கள் ஆண்டு விற்பனை இலக்கை குறைத்துள்ளது. வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனத்துக்கு, தமிழகத்தின் துாத்துக்குடியில் ஆலை உள்ளது. அங்கு வரும் 30ம் தேதி முதல் முழுமையான மின்சார வாகன தயாரிப்பை துவங்க திட்டமிட்ட நிலையில், ஜூலை 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வினியோக கட்டமைப்பு ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், முதல் ஆண்டுக்கான விற்பனை இலக்காக முன்னர் நிர்ணயித்த 4,500 மின்சார கார்கள் என்பதை, தற்போது 3,000 ஆக குறைத்து உள்ளது. பண்டிகை சீசனில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருந்த வி.எப்.,6 மற்றும் வி.எப்.,7 எஸ்.யூ.வி., கார்கள் அறிமுகத்தை ஒரு மாதம் வின்பாஸ்ட் தள்ளி வைத்துள்ளது. இதன்படி, இந்த கார்களுக்கான புக்கிங், ஜூலை இரண்டாவது வாரத்தில் துவங்கி, ஆகஸ்டு மாத இறுதியில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ