உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உணர்வுமயமாக முதலீடு முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் வழிகள்

உணர்வுமயமாக முதலீடு முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் வழிகள்

முதலீடு முடிவுகளை மேற்கொள்ள ஆய்வும், வலுவான அடிப்படையும் அவசியம். நிதி சாதனங்கள் அளிக்கக்கூடிய பலன், முதலீடு கால அளவு, இடர் தன்மை உள்ளிட்ட அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம். முதலீடு முடிவுகளில் அவசரம் காட்டவும் கூடாது; உணர்ச்சிமயமாகவும் முடிவு எடுக்கக்கூடாது. நல்ல நிதி புரிதல் உள்ள முதலீட்டாளர்கள் கூட, பல நேரங்களில் அச்சம், பொறாமை, மிகை நம்பிக்கை உள்ளிட்ட காரணங்களால் முதலீடு முடிவை எடுக்கலாம். உணர்வுமயமான முடிவு பாதிப்பை உண்டாக்கலாம் என்பதால், அதை தவிர்க்கும் வழிகளை அறிந்திருக்க வேண்டும்.

அடிப்படை உணர்வுகள்:

தகவல் அடிப்படையில் முதலீடு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சந்தையின் ஏற்ற இறக்கம் அல்லது நிச்சயமற்ற தன்மை, முதலீட்டாளர்கள் மனதில் தாக்கம் செலுத்தலாம். இதுவே, சரியும் சந்தையில், எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்த அல்லது குறுகிய கால அச்சத்தால் நீண்ட கால பலனை மறக்க வைக்கிறது.

குறுகிய காலம்:

முதலீடு தொடர்பாக அதிக தகவல்கள் கிடைப்பதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சமூக ஊடக பகிர்வுகள் இதை இன்னும் மோசமாக்கலாம். இந்த சூழலில், முதலீட்டாளர்களுக்கு குழப்பமும், கலக்கமும் ஏற்படுவது இயற்கையே. குறுகிய கால பலன்களை மட்டுமே பார்ப்பது, அவர்கள் செய்யும் முக்கிய தவறுகளில் ஒன்றாகிறது.

புதிய வாய்ப்புகள்:

பாரம்பரிய முதலீடு வாய்ப்புகள் தவிர புதிதாக பல வாய்ப்புகள் அறிமுகமாகி இருக்கின்றன. இவை ஈர்ப்பை அளிக்கலாம். ஆனால், முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட முதலீடு வாய்ப்பு தங்களுக்கு பொருத்தமானதா எனும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். நிதி இலக்குகளுக்கு ஏற்றதாக இல்லையெனில் தவிர்க்க வேண்டும்.

கட்டுப்பாடு விதிகள்:

முதலீடு வாய்ப்புகள், கட்டுப்பாடு அமைப்புகளுக்கு கீழ் வருகின்றனவா என்பதை பார்க்க வேண்டும். கட்டுப்பாடு விதிகள் இல்லையெனில் அவற்றுக்கு கண்காணிப்பும் இல்லை. ஏதேனும் பிரச்னை வந்தால், முறையிட வழியும் இல்லை என்பதை உணர வேண்டும்.இத்தகைய வாய்ப்புகள் மோசடிகளாகவும் இருக்கலாம்.

நிதி இலக்குகள்:

எப்போதும், நிதி இலக்குகளை முதன்மையாக கருத வேண்டும். சந்தை ஏறலாம் அல்லது இறங்கலாம்; அதற்கேற்ப முடிவு எடுக்கும்துாண்டுதல் பெறலாம். நிதி இலக்கை மனதில் கொள்ளவேண்டும். சரியான கேள்விகளை கேட்டுக்கொள்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை