வெளிநாடுக்கு விமான டிக்கெட் பகுதியாக செலுத்தலாம்
புதுடில்லி:வெளிநாடு பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவின் போது, பகுதி யாக கட்டணத்தை செலுத் தும் வசதியை 'மேக் மை டிரிப்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.அந்நிறுவனம், அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சர்வதேச விமானங்களில் பயணம் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் டிக்கெட் முன்பதிவின் போது, மொத்த கட்டணத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகையை, பயணம் துவங்கும் தேதிக்கு முன்னதாகவோ அல்லது முன்பதிவு செய்த 45 நாட்களுக்குள், எது முன்னர் வருகிறதோ, அதற்குள் கூடுதல் கட்டணமின்றி செலுத்தலாம். குடும்பத்தினர், குழுவாக பயணிப்போர் சிரமத்தை கருத்தில் கொண்டு, முதல்முறையாக இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.