183 சதவிகிதம்
ரிசர்வ் வங்கியால், கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட, 4வது கட்ட தங்க பத்திரக் கணக்கை, முதிர்வுக்கு முன்னதாகவே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 11,003 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையோடு ஒப்பிடுகையில், 183 சதவீதம் அதிகமாகும். வெளியிடப்பட்ட அன்று 1 கிராம் தங்கம் 3,890 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 11,003 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கத்துக்கு 7,113 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஒரு கிராம் தங்கம் முதலீட்டின் போது ரூ.3,890 தற்போது பெறுவது ரூ.11,003 விலை உயர்வு 183 %