உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  எல்.ஐ.சி.,யின் 2 புதிய திட்டங்கள்

 எல்.ஐ.சி.,யின் 2 புதிய திட்டங்கள்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., 'புரொடக் ஷன் பிளஸ், பீமா கவச்' என இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தையோடு இணைந்த சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டமாக புரொடக் ஷன் பிளஸ் உள்ளது. பீமா கவச் திட்டம், உத்தரவாதம் தரப்பட்ட, இறப்புக்கு பிந்தைய குடும்ப பலனை கொண்டதாகும். புரொடக் ஷன் பிளஸ் நீண்டகால சொத்து உருவாக்கத்தை இத்திட்டம் கொண்டுள்ளது. பாலிசிதாரர்கள் வழக்கமான அல்லது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், தங்கள் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், பிரீமியம் டாப் அப் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, பகுதியளவு திரும்ப பெறும் வசதியும் உள்ளது. 18 முதல் 65 வயது வரை இந்த பாலிசியில் சேரலாம். பீமா கவச் பீமா கவச் திட்டம், முற்றிலும் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். சந்தை நிலவரங்கள் பாதிக்காத, இறப்புக்கு பிந்தைய நிர்ணயிக்கப்பட்ட பலனை பாலிசிதாரரின் குடும்பத்துக்கு இது வழங்குகிறது. 18 முதல் 65 வயது வரை இந்த பாலிசியைப் பெறலாம். குறைந்தபட்ச முதிர்வு 28 வயதாக இருக்கும். சிங்கிள் பிரீமியம் அல்லது தவணைகளாகச் செலுத்தும் வசதி இத்திட்டத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை