ஏ.பி.எல்., அப்போலோ பங்கு 21% வீழ்ச்சி
‘டா டா ஸ்டீல்’ நிறுவனம் தன் ‘டியூப்’ வணிகத்தையும், ‘டாடா ஸ்டீல் கலர்ஸ்’ நிறுவனத்தில் தனக்கிருந்த மொத்த பங்குகளையும், ‘ஏ.பி.எல்., அப்போலோ டியூப்ஸ்’ நிறுவனத்திடம் விற்பதற்கு முடிவு செய்துள்ளது. இதில், டியூப் வணிகம் 11,700 கோடி ரூபாய்க்கும், டாடா ஸ்டீல் கலர்ஸ் பங்குகள் 16,300 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியானதால், நேற்று வர்த்தக முடிவில் டாடா ஸ்டீல் பங்கு விலை 8 சதவீத சரிவுடன் 163 ரூபாயிலும், ஏ.பி.எல்., அப்போலோ டியூப்ஸ் பங்கு விலை 21 சதவீத சரிவுடன் 1,670 ரூபாயிலும் நிலைபெற்றன.