உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., வெளியிட ஏஸ்வெக்டர் விண்ணப்பம்

 ஐ.பி.ஓ., வெளியிட ஏஸ்வெக்டர் விண்ணப்பம்

டிஜிட்டல் காமர்ஸ் நிறுவனமான 'ஏஸ்வெக்டர்', ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இதன்படி, 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், 6.38 கோடி பங்குதாரர்களின் பங்குகளையும் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏஸ்வெக்டர் நிறுவனம், ஸ்னாப்டீல், யுனிகாமர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதில், யுனிகாமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகை, தொழில்நுட்ப கட்டமைப்பு, ஸ்னாப்டீலுக்கான மார்க்கெட்டிங், வணிக விரிவாக்கம் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க், ஏஸ்வெக்டரின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்