உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை மதிப்பில் அதானி பவர் 11வது இடம்

 சந்தை மதிப்பில் அதானி பவர் 11வது இடம்

ந டப்பு 2026ல் 'அதானி பவர்' பங்குகள் 68 சதவீதம் வரை உயர்ந்ததால், அதன் சந்தை மதிப்பு 4.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, 4.72 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதி ப்பு கொண்ட 'இன்போசிஸ்' நிறுவனத்தை விஞ்சி, இந்தியாவின் 11வது மிக மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் 'எல் நினோ' தாக்கத்தால் மின்சார தேவை உச்சத்தை தொட்டதே அதானி பவர் பங்குகளின் விலை உயர காரணமாகும். இதன் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தில் 3 சதவீதம் உயர்ந்து 252 ரூபாய் என்ற 52 வார உச்சத்தை தொட்டு, இறுதியில் 249.43 ரூபாய்க்கு நிறைவடைந்தது. இப்பங்கு கடந்த ஓராண்டில் 126 சதவீதமும், 5 ஆண்டுகளில் 1,213 சதவீதமும் வருமா னத்தை தந்துள்ளது. மேலும், நடப்பு 2026ல் அதானி குழுமம் தனது சந்தை மதிப்பில் 5 லட்சம் கோடி ரூபாயை கூடுதலாக சேர்த்துள்ளதால், அதன் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் மைல்கல்லை நெருங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி