உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மலிவு விலையில் கிடைக்கும் கடன் பத்திரங்கள்: ‘கோல்டுமேன் சாக்ஸ்’ அறிக்கை

மலிவு விலையில் கிடைக்கும் கடன் பத்திரங்கள்: ‘கோல்டுமேன் சாக்ஸ்’ அறிக்கை

சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், கடன் பத்திர சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு 2026ம் ஆண்டின் இறுதி வரை புதிய மற்றும் லாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் எனவும், குறிப்பாக, ஏ.ஐ., சார்ந்த நிறுவனங்களின் கடன்கள் மற்றும் நகராட்சி பாண்டுகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளதாகவும் ‘கோல்மேன் சாக்ஸ்’ தரகு நிறுவனத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

முக்கிய வாய்ப்புகள்

1 ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவனங்கள் அதிகளவில் கடன் பெற்று வரும் நிலையில், தற்போதைய சந்தை மாற்றங்களால் நல்ல லாப வாய்ப்பும், உறுதியான அடிப்படைகளும் கொண்ட உயர்தர ஏ.ஐ., கடன் பத்திரங்களை ஈர்க்கக்கூடிய விலையில் வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் 2 கடந்த சில மாதங்களாக நகராட்சி பாண்டுகளின் வினியோகம் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் மிக உயர்ந்த தர குறியீடு கொண்ட பத்திரங்களை அதிக லாபத்தில் வாங்க முடிகிறது. குறிப்பாக, பாண்டுகளின் வருவாய் 10 சதவீதம் வரை நெருங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. 3 தற்போதைய பத்திர சந்தையில் நிலையற்ற தன்மை குறைவாகவே உள்ளது. இது முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு போர்ட்போலியோவை எதிர்கால சரிவுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தருகிறது. சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், கடன் பத்திர சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு 2026ம் ஆண்டின் இறுதி வரை புதிய மற்றும் லாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் எனவும், குறிப்பாக, ஏ.ஐ., சார்ந்த நிறுவனங்களின் கடன்கள் மற்றும் நகராட்சி பாண்டுகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளதாகவும் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ தரகு நிறுவனத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

முக்கிய வாய்ப்புகள்

1 ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவனங்கள் அதிகளவில் கடன் பெற்று வரும் நிலையில், தற்போதைய சந்தை மாற்றங்களால் நல்ல லாப வாய்ப்பும், உறுதியான அடிப்படைகளும் கொண்ட உயர்தர ஏ.ஐ., கடன் பத்திரங்களை ஈர்க்கக்கூடிய விலையில் வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் 2 கடந்த சில மாதங்களாக நகராட்சி பாண்டுகளின் வினியோகம் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் மிக உயர்ந்த தர குறியீடு கொண்ட பத்திரங்களை அதிக லாபத்தில் வாங்க முடிகிறது. குறிப்பாக, பாண்டுகளின் வருவாய் 10 சதவீதம் வரை நெருங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. 3 தற்போதைய பத்திர சந்தையில் நிலையற்ற தன்மை குறைவாகவே உள்ளது. இது முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு போர்ட்போலியோவை எதிர்கால சரிவுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தருகிறது.

சந்தை மாற்றங்களை கவனியுங்கள்

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித மாற்றங்கள் மற்றும் தொடர்ந்து உயர்ந்து வரும் வட்டி ஆகியவை சில நிறுவனங்களின் நிதி செயல்பாடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சந்தையை ஒட்டுமொத்தமாக பார்க்காமல், ஏ.ஐ., கடன்கள் மற்றும் பிற கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்யும் போது வலுவான நிறுவனங்களையும் பலவீனமான நிறுவனங் களையும் சரியாக பிரித்தறிந்து முதலீடு செய்ய வேண்டும். தற்போதைய சூழல், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு லாபத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு முதலீட்டாளர்கள் உலகளாவிய சந்தை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து தங்களது முதலீடுகளை திட்டமிடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை