உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பி.எஸ்.இ., சாத்விக் 100 அறிமுகமானது குறியீடு

 பி.எஸ்.இ., சாத்விக் 100 அறிமுகமானது குறியீடு

பி.எஸ்.இ.,யின் துணை நிறுவனமான 'பி.எஸ்.இ., இண்டெக்ஸ் சர்வீசஸ்' நிறுவனம் இந்தியாவின் முதல் 'பி.எஸ்.இ., சாத்விக் 100' குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.இ., 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், புகையிலை, சூதாட்டம் உள்ளிட்ட நெறிமுறையற்ற துறைகளன்றி சாத்வீக கொள்கைகள் அடிப்படையில் செயல்படும் 100 நிறுவனங்களை தேர்வு செய்து இந்த குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், சமூக பொறுப்பு மற்றும் நல்ல நிர்வாகம் சார்ந்த முதலீடுகளில் அதிகரித்து வரும் ஆர்வத்துக்கு மத்தியில் இந்த புதிய குறியீடு அறிமுகமாகியுள்ளது. இந்த குறியீட்டை அடிப்படையாக கொண்டு இ.டி.எப்.கள், இண்டக்ஸ் பண்டுகள், மியூச்சுவல் பண்டு திட்டங்கள் மற்றும் போர்ட்போலியோ மேலாண்மை சேவைகள் போன்ற முதலீட்டு தயாரிப்புகளை உருவாக்க முடியும் என பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. துறை வாரியான பங்களிப்பு: நிதிச்சேவைகள் - 37.55% (அதிகபட்ச பங்கு) நுகர்வோர் விருப்ப பொருட்கள் எரிசக்தி கமாடிட்டீஸ் தொழில்துறை பயன்பாட்டு சேவைகள் தொலைத்தொடர்பு அதிக 'வெயிட்டேஜ்' கொண்ட பங்குகள்: ஹெச்.டி.எப்.சி., பேங்க் ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்போசிஸ் எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி கோட்டக் மஹிந்தரா வங்கி மஹிந்தரா அண்டு மஹிந்தரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை