காடியம் ஐ.வி.எப்., அண்டு வுமன் ஹெல்த்
இந்நிறுவனம் ஐ.வி.எப்., மருத்துவ சிகிச்சை சேவையை, 30க்கும் மேற்பட்ட இடங்களில் வழங்கி வருகிறது. ஏழு (டில்லி - 2 மையங்கள், மும்பை, லுாதியானா, ஸ்ரீநகர், பட்னா, பெங்களூரு) மையங்களையும் 28 கிளைகளையும் (கூட்டணி முறையில்) கொண்ட ஹப் - அண்டு - ஸ்போக் மாடலில் செயல்பட்டு வருகிறது. ஐ.வி.எப்., - ஐ.சி.எஸ்.ஐ., மற்றும் ஐ.யு.ஐ., என்ற மூன்று நடைமுறைகளில் சிகிச்சைகளை வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.