உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கனரா ஏ.ஐ., 1 பே யு.பி.ஐ., செயலி அறிமுகம்

 கனரா ஏ.ஐ., 1 பே யு.பி.ஐ., செயலி அறிமுகம்

பொதுத்துறையைச் சேர்ந்த கனரா வங்கி, 'கனரா ஏ.ஐ., 1 பே' என்ற ஒருங்கிணைந்த யு.பி.ஐ., செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உடனடியாக பேமென்ட் செய்ய உதவுவதோடு, நம் செலவுகள் குறித்து தெரிந்துகொள்வது, 'பின் நம்பர்' இல்லாமல் பரிவர்த்தனை செய்ய வழிவகுக்கும் 'யு.பி.ஐ., லைட்' மற்றும் வெகுமதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பான செயலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரா வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது: பயனர்கள், எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், இந்த செயலியில் அந்த வங்கிக் கணக்கை இணைத்து பயன்படுத்த முடியும். இந்த செயலியில் 'யு.பி.ஐ., டெலிகேட்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முதன்மை பயனர் தன் நம்பிக்கைக்கு உரிய குடும்பத்தினரை யு.பி.ஐ., கணக்கில் சேர்க்கலாம். அவ்வாறு சேர்க்கப்படும் நபருக்கு, மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரை செலவு செய்ய அனுமதி வழங்கி வரம்பு நிர்ணயிக்க முடியும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை