ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு தங்க இ.டி.எப்., திட்டத்தில் மாற்றம்
த ங்க இ.டி.எப்., திட்டத்தின் கட்டமைப்பில், வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் சில அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு அறிவித்துள்ளது. இதன்படி, திட்டத்தின் மொத்த மதிப்பில் 95 முதல் 100 சதவீதம் வரை தங்கத்தில் முதலீடு செய்யப்படுவது தொடரும். அதேவேளையில், இனி தங்கம் சார்ந்த பிற திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். நிகர சொத்து மதிப்பில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை தங்க டிபாசிட் திட்டங்கள், தங்கத்தை பணமாக்கும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தில் தொடர விரும்பாத முதலீட்டாளர்கள், வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள் எவ்வித விலகல் கட்டணமுமின்றி தங்கள் முதலீடுகளை திரும்ப பெறலாம்.