செக் உடனடி பணமாகும் திட்டம் ஒத்திவைப்பு
காசோலைகளை மேலும் விரைந்து பணமாக்குவதற்காக, வரும் ஜனவரி 3ம் தேதி துவங்க இருந்த இரண்டாம் கட்ட திட்டத்தை ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்துள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தின்படி, ஒரு வங்கி, காசோலையின் மின்னணு வடிவ பிம்பத்தை பெற்று மூன்று மணி நேரத்துக்குள் அதை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்பட்டு, காசோலை அனுப்பிய வங்கிக்கணக்கில் இருந்து பணம் விடுவிக்கப்படும். இதை செயல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.