10 ஆண்டு உச்சம் தொட்ட சீன சந்தை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங் சந்திப்பைத் தொடர்ந்து, சீனப் பங்குச் சந்தை, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டி, பின் இறக்கத்தில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையால், ஷாங்காய் கூட்டுக் குறியீடு, 2015க்குப் பிறகு, மிக உயர்ந்த அளவை அடைந்தது. குறிப்பாக வங்கி, காப்பீடு மற்றும் மதுபானத் துறைகள் அதிக ஏற்றம் கண்டன.