ரூ.1,000 கோடிக்கு கடன் பத்திரம் சோழமண்டலம் வெளியிடுகிறது
முருகப்பா குழுமத் தின் நிதிச்சேவை பிரிவான ' சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட்' ஐந்து ஆண்டுகளில் முதிர்வடையும், பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. வரும் 2030, அக்., 14ம் தேதி முதிர்வடையும் பத்திரங்களுக்கு 7.58 சதவீத வட்டி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், செலவினங்கள் அதிகரிப்பால் குறைந்து போன தனியார் நிறுவன கடன் பத்திரங்கள் வெளியீடு, மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.