குரோ தளத்தில் கமாடிட்டி வர்த்தகம்
பங்கு தரகு நிறுவனமான குரோ, இனி தனது தளத்தில் கமாடிட்டி வர்த்தகத்தையும் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், எம்.சி.எக்ஸ்., சந்தையில், காலை 9 மணி முதல் இரவு 11:30 மணி வரை, கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி, இயற்கை எரிவாயு, உலோகங்கள் ஆகியவற்றுக்கான வர்த்தகத்தில் குரோ வாடிக்கையாளர்கள் ஈடுபடலாம் என அறிவித்துள்ளது. தற்போது 1.80 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள குரோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'பில்லியன் பிரையன்ஸ் கரேஜ் வெஞ் சர்ஸ்', கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, வரும் நவம்பரில் ஐ.பி.ஓ., வர உள்ளது.