உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  நிப்டியில் கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது

 நிப்டியில் கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது

நிப்டி நேற்றைய வர்த்தகத்தில் 67 புள்ளிகள் ஏற்றத்துடன் காணப்பட்டது. வர்த்தகத்தின் இடையில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், 4 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி 'நிப்டி 100 குறியீடு' குறைந்தபட்சமாக 0.03 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250 குறியீடு' அதிகபட்சமாக 1.49 சதவீதமும் உயர்ந்து நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும், 6 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிவடைந்தன.. இவற்றில், ' நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் குறியீடு' அதிகபட்சமாக 0.85 சதவீதம் சரிந்தும், 'நிப்டி ஆட்டோ குறியீடு' அதிகபட்சமாக 1.93 சதவீதம் அதிகரித்தும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,393 நிறுவனங்களின் பங்குகளில் 2,285 ஏற்றத்துடனும், 997 இறக்கத்துடனும், 111 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன.. நிப்டி 14, 21 மற்றும் 50 நாள் சராசரிக்கு மேலே (இ.எம்.ஏ.,) நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., ஓரளவு பாசிட்டிவ்வாக உள்ளது. ஆர்.ஓ.சி., மட்டும் குறுகியகால நகர்வாக ரெசிஸ்டென்ஸுக்கு அருகே கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ள தோற்றத்தை காட்டுகின்றது. தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் 24,550ல் உடனடி ரெசிஸ்டென்ஸிம், 24,190ல் உடனடி சப்போர்ட்டும் உள்ளது. ரெசிஸ்டென்ஸை தாண்டி மேலே சென்றால் 24,740 டெக்னிக்கல் இலக்காக அமையக்கூடும். மறுபக்கம் சப்போர்ட்டை உடைத்து கீழே சென்றால் 24,050 டெக்னிக்கல் இலக்காக அமைய வாய்ப்புள்ளது. ஆதரவு 24,225 24,150 24,075 தடுப்பு 24,425 24,550 24,625


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !