ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் கிரெடிட் ஸ்கோர் கோச்சிங்
'கி ரெட்' நிறுவனம், தனது பயனர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலான 'கிரெடிட் ஸ்கோர் கோச்சிங்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு அம்சங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய காரணம் என்ன, ஸ்கோரை அதிகரிப்பது எப்படி, கிரெடிட் கார்டுகளின் தாக்கம் என்ன என்று ஏ.ஐ., தொழில்நுட்பத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வழிகாட்டல் பெறலாம் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பயனருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் தினசரி கிரெடிட் ஸ்கோர் மாறுதல்களை கண்காணிக்கலாம் மோசடிகள் அல்லது தவறான தரவுகள் பற்றி உடனடியாக 'அலர்ட்' கொடுக்கப்படும் மாதாந்திர அல்லது ஆண்டு சந்தா செலுத்தி இச்சேவையை பயன்படுத்தலாம் பகிர்வு திட்டங்களின் கீழ் 4 பேர் வரை பயன்படுத்தலாம்.