மேலும் செய்திகள்
வேலையின்மை விகிதம் 5.10 சதவீதமாக குறைந்தது
16-Sep-2025
நாட்டின் மிகப்பெரிய பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளரும், 'இந்தியா கேட்' பிராண்டு உரிமையாளருமான கே.ஆர்.பி.எல்., நிறுவனத்தின் செயல்சாரா இயக்குநர் பதவியில் இருந்து அனில் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார். செயில் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இவர், கடந்த ஓராண்டுக்கு முன் இந்நிறுவனத்தில் நியமிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், இயக்குநர்கள் குழு கூட்டத்தின் முடிவுகளை முறையாக பதிவு செய்யாதது, சி.எஸ்.ஆர்., நிதி பயன்படுத்துவது தொடர்பான கவலை உட்பட பல்வேறு நிர்வாக குளறுபடிகளை தன் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்றைய வர்த்தகத்தின் போது இந்நிறுவன பங்கு 10 சதவீதம் சரிவை கண்டு, 401.45 ரூபாயாக குறைந்தது. முடிவில் சற்று அதிகரித்து, பங்கு விலை 402 ரூபாயாக இருந்தது.
16-Sep-2025