உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பேமிலி ஆபீஸ் கண்காணிப்பா? செபி மறுப்பு அறிக்கை

பேமிலி ஆபீஸ் கண்காணிப்பா? செபி மறுப்பு அறிக்கை

புதுடில்லி:நம் நாட்டின் பெரும் பணக்காரர்களின் குடும்ப வருவாயை பராமரிக்கும் அலுவலகங்களை, தன் நேரடி பார்வையில் கொண்டு வர, செபி திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அந்த அமைப்பு மறுத்துள்ளது. அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் மற்றும் குடும்பங்கள், தங்களது சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும், அதிலிருந்து மேலும் லாபம் ஈட்ட முதலீடுகள் செய்யவும் ஒரு தனிப்பட்ட அலுவலகத்தை அமைப்பர். அது தான் 'பேமிலி ஆபீஸ்' எனப்படுகிறது. இந்நிலையில் இந்த அலுவலகங்களிடம், முதலீட்டாளர்களின் சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் வட்டி உள்ளிட்ட வருவாய் ஆகிய விபரங்களை, செபி கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேமிலி ஆபீஸ்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர செபி திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. “இது தவறான தகவல். இதுபோன்ற எந்த ஒரு பரிசீலனையும் தற்போதைக்கு செபியிடம் இல்லை”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ