விடைபெறும் விண்டோஸ் 10
லாஸ் ஏஞ்சல்ஸ் : விண்டோஸ் 10' இயங்குதளத்துக்கு அளித்து வரும் ஆதரவை, வரும் அக்.14 முதல் நிறுத்த இருப்பதாக, 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது. அக்.14க்கு பின்னர், விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கு புதிய பாதுகாப்பு அப்டேட், தொழில்நுட்ப ஆதரவுகள் கிடைக்காது. இதனால், பழைய இயங்குதளத்தை பயன்படுத்துவோர், சைபர் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதோடு, சில செயலிகள் செயல்படாமல் போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மைக்ரோசாப்ட் 365 செயலிகளான வேர்ல்டு, எக்ஸல் மற்று அவுட்லுக் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அப்டேட்டுகள், வரும் 2028 அக்டோபர் வரையும்; புதிய அம்சங்களுக்கான அப்டேட்டுகள் 2026 ஆகஸ்ட் வரையும் தொடர்ந்து கிடைக்கும். பயனர்கள் தங்களது பர்சனல் கம்யூட்டரில் 'விண்டோஸ் 11' இயங்குதளம் செயல்படுமா என்பதை, விண்டோஸ் அப்டேட் பகுதிக்கு சென்று சரிபார்க்கலாம். எதற்கும் உங்கள் தரவுகளை பேக் அப் செய்து வைத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.