மேலும் செய்திகள்
டேபிள் டென்னிஸ் அரையிறுதி சென்னை பல்கலை தகுதி
28-Dec-2025
அண்ணா பல்கலை., நிர்வாக படிப்புகள் துறை சார்பில், முதுநிலை நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலை., யின் நிர்வாக படிப்புகள் துறை சார்பில், 'நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனும் தேசிய பங்குச் சந்தையின் பங்களிப்புடன், முதுநிலை நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கி முதலீடு, மியூச்சுவல் பண்டு, காப்பீடு, இடர் மேலாண்மை ஆகியவற்றில், தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள, இந்த சான்றிதழ் படிப்பு உதவும் என, பல்கலை., தெரிவித்துள்ளது. முதுநிலை நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பின் கால அளவு 11 மாதங்கள். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும். இதற்கான வகுப்புகள், வருகிற மார்ச் மாதம் துவங்குகின்றன. இந்த சான்றிதழ் படிப்புக்கு, www.nseacademy.comஎன்ற இணையதளத்தில் வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
28-Dec-2025