உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சுண்டி இழுக்கும் வெள்ளி விலை; ஓடிப்போய் முதலீடு செய்வது சரியா?

 சுண்டி இழுக்கும் வெள்ளி விலை; ஓடிப்போய் முதலீடு செய்வது சரியா?

நடப்பாண்டில் எம்.சி.எக்ஸ்., சந்தையில், வெள்ளி கிட்டத்தட்ட 135 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2025ம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு கிலோ வெள்ளி விலை சராசரியாக 90,000 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 2.14 லட்சம் ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் மொத்த கவனமும் வெள்ளியின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஏற்கனவே அதிக ஏற்றம் கண்டிருக்கும் சூழலில், தற்போது துரத்திச் சென்று வெள்ளியில் முதலீடு செய்கின்றனர் பலர். இது சரியா என, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சிவராமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கடந்த 1978 - 80 மற்றும் 2009 - 11ம் ஆண்டுகளில் வெள்ளி வேகமாக ஏறினாலும், இறங்கும்போது 70 - 80 சதவீத சரிவை சந்தித்தது. 1980ல் ஏற்பட்ட உச்சத்துக்கு பின், மீண்டும் அந்த விலையை தொட 30 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதேபோல, 2011க்குப் பிந்தைய சரிவிலிருந்து மீள கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தேவைப்பட்டது. எனவே, வெள்ளியில் முதலீடு செய்வது, முதலீட்டாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். வெள்ளி முதலீட்டில் லாபம் சீராக கிடைப்பதில்லை. சரியான நேரத்தில் முதலீடு செய்யாவிட்டால், லாபம் ஈட்ட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். தொழில் துறையில் வெள்ளிக்கு அதிக தேவை இருந்தாலும், அதற்குப் பதிலாக, செம்பு, அலுமினியம் போன்ற மலிவான உலோகங்களை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இது, வெள்ளியின் நீண்டகால தேவையை குறைக்க வாய்ப்புஉள்ளது. பொருளாதார நெருக்கடி காலங்களிலும் தங்கம் ஒரு கவசமாக செயல்படுவதால், இது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. எனவே, தங்கம், வெள்ளி ஆகிய இரண்டிலும் கலந்து செய்யப்படும் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, வெள்ளியின் அதீத விலை மாற்றங்களை தங்கம் சமநிலைப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். தங்கம், வெள்ளி ஆகிய இரண்டிலும் கலந்து செய்யப்படும் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, வெள்ளியின் அதீத விலை மாற்றங்களை தங்கம் சமநிலைப்படுத்தும் வெள்ளி முதலீட்டில் லாபம் சீராக கிடைப்பதில்லை. சரியான நேரத்தில் முதலீடு செய்யாவிட்டால், லாபம் ஈட்ட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி